ஆரோக்கியமான குழந்தை!- Healthy Child
குழந்தை ஒழுங்காக வளருகிறதா? அது ஆரோக்கியத்துடன் இருக்கிறதா? இந்த இரண்டு கேள்விகளும் அம்மாவின் மனதில் அடிக்கடி எழக்கூடியவை. அதுவும், குழந்தை பிறந்த தொடக்க மாதங்கள் இந்தக் கேள்விகளில் அம்மாவின் மனதில் தினமுமே கூட எழலாம்.
குழந்தை உற்சாகமாக இருக்கிறதா? சுறுசுறுப்பாகக் கைகளையும் கால்களையும் அசைத்துக் கொள்கிறதா? அப்படியானால், குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வருகிறது என்றுதான் அர்த்தம்.
குழந்தையின் எடைக்கும் அதன் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் சுட்டிக்காட்டுவதில் முக்கியப் பங்கு உண்டு. அதுவும், தொடக்க மாதங்களில் எடையின் முக்கியத்துவம் அதிகம்.
குழந்தையால் நிற்க முடியும்போது, அதன் உயரத்தைக் கொண்டும் வளர்ச்சியை அறியலாம்.
ஒரு குழந்தையின் உயரத்தை நிர்ணயிப்பது எது? அப்பா, அம்மா ஆகிய இருவரிடமிருந்தும் பெறப்பட்ட மரபணுத் தன்மைகள்தான் குழந்தையின் உயரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த உயரத்தைக் குழந்தை அடைய, போதிய, ஹார்மோன்கள் அவனது அல்லது அவளது உடலில் சுரக்கவேண்டும். அதுமட்டுமல்ல, ஆரோக்கியமான உணவு, நோய்களால் பாதிக்கப்படாமை, மனமகிழ்ச்சி ஆகியவற்றிற்கும் இந்த உயரத்தைக் குழந்தை அடைவதில் முக்கியப் பங்கு உண்டு.
ஒரு குழந்தை போதிய அளவு வளரவில்லையென்றால், மேலே குறிப்பிட்ட அடிப்படைகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கிறது என்று பொருள்.
சில குழந்தைகள் ஏன் குள்ளமாகவே இருக்கிறார்கள் என்பதற்கான சில முக்கியக் காரணங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
பரம்பரை:
அப்பாவும் அம்மாவும் உயரம் குறைவானவர்கள் என்றால், குழந்தை மட்டும் ஒட்டகச்சிவிங்கி உயரத்திற்கு உயர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பு.
நாட்பட்ட நோய்:
நீண்ட நாள் நோய் காரணமாக உயரம் சரியாக அதிகரிக்காமல் இருக்கலாம். தீவிர ஆஸ்துமா, சிறுநீரகத் தொற்றுக்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியவை.
கருக் காலம்:
கருவுற்ற காலத்திலேயே போதிய வளர்ச்சியின்றி, பிறக்கும்போதே குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தை, வளர்ந்த பின்னரும் உயரம் குறைவாகவே இருக்க வாய்ப்பு அதிகம்.
ஜீரணக் குறைபாடு:
ஜீரணம் போன்றவற்றில் கோளாறு ஏற்பட்டு அதற்குப் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலே இருந்துவிட்டாலும் உயரம் குறைவாக இருக்கலாம்.
இது தவிர,
1. வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் போதிய அளவில் சுரக்கவில்லையென்றாலோ, தைராய்டு நோய் இருந்தாலோ உயரம் குறைய வாய்ப்புண்டு.
2. சில சமயம் தாமதமாகப் பருவம் அடைந்தால் வளர்ச்சி அதுவரை தடைபட்டு, அதற்குப் பிறகு வேகமாகி போதிய உயரத்தை அடைந்து விடும்.
குழந்தை குள்ளமாக இருப்பதாகத் தோன்றினால், அம்மாவைக் கவலை ஆட்டுவிக்கும். வளர்ந்த பிறகும் இவன் (அல்லது இவள்) குள்ளமாகவே காட்சியளித்தால் என்னாவது? வெற்றி வாய்ப்புகள் குறைவதோடு பிறரால் கிண்டல் செய்யப்பட்டால் இது இவன(ள)து மனநலத்தையும் பாதிக்குமே!
இதுபோன்ற கவலை தோன்றும்போது அம்மா குழந்தைநல மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதாவது நோய்க் காரணமாக வளர்ச்சி தடைபட்டிருந்தால் அந்த நோயைத் தீர்க்கும் வழிமுறைகளை டாக்டர் கூறுவார். அல்லது இயல்பான உயரத்தை அவன் அல்லது அவள் அடைவதற்கான சிகிச்சையை உடனடியாகத் தொடங்குவார்.ர்ஏனென்றால், பருவமடைவதற்கு முன்பே இந்த சிகிச்சையைத் தொடங்குவது நல்லது என்பது அவருக்குத் தெரியும்.
டாக்டர் குழந்தை குறித்த பல விவரங்களை அம்மாவிடம் கேட்டுத் தெளிவு பெறுவார். கூடவே குழந்தையின் குடும்பம் தொடர்பான பல தகவல்களையும் கேட்டுத் தெளிவு பெறுவார்.
குழந்தை அது அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்று டாக்டர் அப்போதும் கருதினால், பலவித சோதனைகளுக்குக் குழந்தையை உட்படுத்துவார்.
1. எலும்பு வயது
அதாவது எலும்புகளின் வளர்ச்சி, குழந்தையின் உயரத்திற்கு ஏற்ற அளவில் இருக்கிறதா என்பதை அறியும் சோதனை இது. எக்ஸ்ரே மூலம் இதை அறிந்து கொள்ள முடியும். பொதுவாக மணிக்கட்டுப் பகுதியை டாக்டர் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார். எலும்பு வளர்ச்சியும், குழந்தையின் தற்போதைய உயரமும் ஒத்துப் போனால், குழந்தையின் வளர்ச்சி இயல்பானதுதான் என்பதையும், நாளடைவில் எலும்புகளின் வளர்ச்சிக்கேற்ப உயரமும் அதிகமாகவே செய்யும் என்பதையும் அறியலாம்.
2. ரத்தப் பரிசோதனை
குழந்தையின் ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருக்கலாம். அவற்றிலுள்ள ஹீமோகுளோபின் குறைவினால் அனிமியாவினால் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.
தைராய்டு குறைவாகச் சுரப்பதினாலும் செக்ஸ் ஹார்மோன்கள் போதிய அளவு சுரக்காததினாலும் கூட குழந்தையின் உயரம் தடைபடலாம்.
இந்தக் குறைபாடுகளை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். இதைத் தொடர்ந்து டாக்டர் உரிய சிகிச்சையின் மூலம் குழந்தையின் உயரம் தடைபடுவதற்கான காரணத்தை அகற்றுவார்.
3. சிறுநீர் சோதனை
ரத்தம் மட்டுமல்ல, சிறுநீர் சோதனையின் மூலமும் வளர்ச்சிக்கான ஹார்மோன்களின் அளவைக் கண்டறியலாம். சிலவகைக் தொற்றுக்கிருமிகள் உடலில் இருந்து கொண்டு உடல் வளர்ச்சியைத் தடை செய்வதையும் சிறுநீர் சோதனை மூலம் கண்டறிய முடியும்.
4. மார்பு எக்ஸ்ரே
விலா எலும்புகளின் நிலையினை அறிவதன் மூலமும் குழந்தை அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிட்டதா என்பதை டாக்டரால் தீர்மானிக்க முடியும்.
மேற்படி, சோதனைகளின் மூலம் குழந்தையின் உடலில் ஏதாவது வியாதி காணப்பட்டால் அதை டாக்டர் தீர்க்க முனைவார். பரம்பரை (மரபணு) காரணமாகத்தான் உயரக் குறைவு என்று கண்டறிந்தால், குழந்தையின் வருங்கால ஆரோக்கியம் குறித்தும் மரபணு காரணமாக வேறு என்னென்ன குறைபாடுகள் வருங்காலத்தில் ஏற்படக் கூடும் என்பது குறித்தும் டாக்டர் அம்மாவிடம் விவரிப்பார்.
வளர்ச்சி ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால், உரிய உயரம் அடையும் வரையில், இந்த ஹார்மோன்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய டாக்டர் முயற்சி எடுத்துக் கொள்வார்.
உயரக் குறைவு மட்டுமல்ல, மிக மிக உயரமாக ஒரு குழந்தை இருந்தாலும் அது சிலசமயம் டாக்டரின் கவனத்துக்கு உரியதாகும். ஏனென்றால், இதுகூட ஹார்மோன் தாறுமாறாகச் சுரப்பதினால் ஏற்படலாம்.
அதாவது ஹார்மோன் வயதுக்கு மீறிச் சுரப்பதால், மிக இளம் வயதிலேயே குழந்தையின் உடலில் பருவமடைவதற்கான மாறுதல்கள் தோன்றத் தொடங்கி விடுகின்றன. சிலசமயம், மிக அதிகமான எடை காரணமாகக்கூட உயரம் அதிகரிக்கலாம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெரியவர்களாகும்போது இவர்கள் உயரக் குறைவானவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு! காரணம், பருவமடைந்தவுடனேயே எலும்பு வளர்ச்சி நின்று விடலாம். ஏனென்றால், அப்போதே வளர்ச்சி ஹார்மோன்களும் சுரப்பதை நிறுத்திக் கொள்வதுதான். அதாவது பதினெட்டு வயதுவரை உயரம் அதிகரிக்க பிரகாசமான வாய்ப்பு உண்டு என்றபோதிலும் பருவமடைந்த பதினைந்தாவது வயதிலேயே உயர வளர்ச்சி நின்றுவிடும்.
குழந்தையின் தோல் பாதுகாப்புக்கு
1. வாசனைப் பொருட்கள் அடங்கிய சோப்பு, லோஷன் போன்றவற்றைத் தவிர்ப்பதே நல்லது. இவை குழந்தையின் தோலுக்கு எரிச்சல் ஏற்படுத்தக் கூடும் என்பதோடு, சில சமயம் தோலில் உள்ள பாதுகாப்பு எண்ணெய்ப் படலத்தையும் நீக்கிவிடக் கூடும்.
2. குழந்தை மலம் கழித்தால் உடனடியாக அந்தத் துணியை மாற்றிவிடுங்கள்.
3. மிக இளம் குழந்தைகளுக்கு (நான்கு மாதங்கள் வரையிலாவது) எந்தவித டால்கம் பவுடரும் தேவையில்லை என்கிறார்கள் பல டாக்டர்கள். இவற்றால் சிலசமயம் நுரையீரல் பாதிப்புகூட ஏற்பட வாய்ப்பு உண்டாம்.
4. குழந்தையின் உடலைத் தண்ணீரால் துடைத்த பிறகு நன்கு உலர வைக்கவும்.
5. ஒரு வயதுடைய குழந்தை என்றால், குடிக்க நிறையத் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
6. புதிய உணவுகளைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது, பலவற்றை ஒரே சமயத்தில் அறிமுகப்படுத்தாமல் ஒரு புதிய உணவுக்கும் மற்றொரு புதிய உணவுக்குமிடையே சில நாட்களாவது இடைவெளி கொடுங்கள். அப்போதுதான் ஏதாவது குறிப்பிட்ட புதிய உணவு ஒத்துக்கொள்ளாமல், குழந்தையின் உடலில் தடிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த உணவை மட்டும் நிறுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

Labels: குழந்தை பராமரிப்பு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home