வளரும் சுட்டிகள்!- Kitties
ஒரு வீட்டில் குழந்தைகள் பள்ளிக்கு போகிற வயதில் இருந்தால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரும்போது, அந்த குழந்தைகள் விளையாடி கொண்டிருக்கும் போதோ அல்லது சமர்த்தாக படித்துக் கொண்டு இருக்கும் போதோ அந்த குழந்தைகளை அழைத்து அவர்கள் கொண்டு வந்திருக்கும் பொம்மைகள், மற்றும் பழங்களை கொடுத்து விட்டு "எப்படி படிக்கிற, படிச்சு என்னவாக வரப்போற..." என்ற கேள்விக்கு, கிரண்பேடி மாதிரி பெரிய போலீஸ் ஆபீஸரா வருவேன்! என்றால் அப்போது குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த குழந்தையை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக ஆமா... இவளோட தட்டக்குச்சி உடம்புக்கு அது ஒண்ணுதான் குறை. ஒழுங்கா படிச்சு டீச்சராவோ, டாக்டராவோ ஆகுற வழியப் பாரு, என்றால் அந்த குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும். அதற்கு பதிலாக நீ போலிஸ் ஆபிஸராக வருவது என்றால் சத்தான உணவு சாப்பிட வேண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற நல்ல கருத்துக்களை கூறி அவர்களின் முயற்சிக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும். அதை விடுத்து அவர்களின் எண்ணத்திற்கு தடை விதிக்க கூடாது. இதனால் அந்த குழந்தையின் வளர்ச்சி பாதையில் மாற்றங்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போய் விடும் அதனால் பெற்றோர்களே அவர்களின் நல்ல எண்ணத்திற்கு தடைகல்லாக இல்லாமல் அவர்களின் விரும்பும் பாதையில் கைப்பிடித்து அழைத்து செல்லுங்கள்.
Labels: குழந்தை பராமரிப்பு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home