சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ

தேவையான பொருட்கள்
விதை நீக்கிய சீதாப்பழம் _ 100 கிராம்,
சுகர் _ 200 கிராம்,
தண்ணீர் _ 100 மி.லி.
எலுமிச்சம்பழச்சாறு _ 2 அல்லது 3 துளிகள்,
பால் _ தேவையான அளவு,
செய்முறை
விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும்.
இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது. சீதாப்பழத்திற்குப் பதில் நாகப்பழத்தையும் சேர்த்துச் செய்தால் நாகப்பழம் மில்க் ஷேக்!
டயட்
ஸ்வீட் அதிகமுள்ள ஏ விட்டமின் பழம். பாலில் புரோட்டின் + கார்போ ஹைட்ரேட் உள்ளது.
வெயிட் போடணும்னு நெனக்கிறவங்க இந்தப் பழ ஜூஸை நெறைய சாப்பிடலாம்.
மசில்ஸ் எல்லாம் நல்லா வளரும். பாடி பில்டர்ஸ் இதை நெறைய விரும்பிச் சாப்பிடக்கூடியது.
அதைவிட முக்கியமா ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் உள்ளவங்ககூட இந்த ஜூஸை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது. டயாபடீஸ்காரங்க சர்க்கரைன்னு வர்ற இடத்தில குறைவா இருந்தா வெல்லமோ, நெறைய இருந்தா ஷுகர் ஃபிரீயோ கலந்து சாப்பிடறதுதான் பெட்டர்.
அத்திப்பழம் காய்ந்ததை விட பழத்தின்விலை கம்மிதான். ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய ஜூஸ்.
ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு (இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது.
Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home