Saturday, 2 March 2013

துப்பாக்கி! - மருது அழகுராஜ்



பெரம்பலூரில்
வீட்டு வாசலில்
தூங்கியவர்
சுட்டுக்கொலை
காஷ்மீரில்
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்
பத்து பேர் பலி
கும்மிடிப் பூண்டி
கிணற்றில்
தோண்ட தோண்ட
தோட்டாக்கள்
ஒலிம்பிக்கில்
அபினேவ் பிந்த்ரா
துப்பாக்கிச் சுடுதலில்
தங்கம் வென்றார்
அப்பாடா...
ஒருவழியாய்
துக்கம்
போக்கியது
ஒரு
'துப்பாக்கி'....!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home