Sunday, 3 March 2013

அம்மா நான் நலமா?- Mummy am i healthy?

Mummy am i healthy? - Child Care Tips and Informations in Tamil
டவுன் குறைபாடு (Down Syndrome)
பார்த்தாலே அவன் குறைபாடுள்ளவன் என்பதைப் பிறர் கண்டுபிடித்துவிடுகிறார்கள். உடனே "உங்க மகனுக்கு ஏதாவது...?" என்று நீட்டி முழக்கிக் கொண்டு கேட்கிறார்கள். இதனால் பெற்றோரும் வளர்ந்தவுடன் அவனும் பாதிக்கப்படுகிறான். அவனுக்கு "டவுன் சின்ரோம்" என்று டாக்டர் சொன்னவுடன் ஏற்படும் தவிப்பு அதேசமயம் பெற்றோருக்கு சில சந்தேகங்கள் ஏற்படும்.
அது (டவுன் குறைபாடுகள்) குறித்த தகவல்கள் இங்கே கேள்வி பதில் வடிவத்தில் அளிக்கப்படுகின்றன.

டவுன் குறைபாடு கொண்ட குழந்தை பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
"டவுன் குறைபாடு" (Down Syndrome) கொண்ட குழந்தைக்கு உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் குறைந்து காணப்படும். முகம் தட்டையாகவும், தலை சிறிது சிறியதாகவும், கண்கள் சாய்ந்தும், மூக்கு சப்பையாகவும், காதுகள் சிறியதாகவும், வாய் திறந்த நிலையிலும், நாக்கு வெளியே திறந்தவாறும் இருக்கும் கழத்து குட்டையாக இருக்கும்.

தசை பலம் குறைந்து இருப்பதால், மூக்கில் அதிகமான அசைவுகள் இருக்கலாம். கைகள் சிறியதாக, வளைந்து காணப்படும்.
இந்தக் குழந்தைகளுக்கு இதய, குடல் கோளாறு ஏற்படலாம். இவர்கள் பழகுவதற்கு இனிமையான சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.
இதுபோன்றவர்களை முன்பு - "மங்கோல்" என்று அழைத்து வந்தார்கள்.

டவுன் குறைபாடு என்றால் என்ன?

குழந்தையின் மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி (இதயம், குடல், எலும்பு) போன்றவற்றைப் பாதிக்கக் கூடிய ஒரு பிறவிக் குறைபாடு.
ஏதாவது விபத்தினால் இப்படி ஏற்படுமா?
இல்லை. பிறவிக் குறைபாடுதான்.

எதனால் இந்த வியாதி ஏற்படுகிறது?

தாய் கர்ப்பமாக இருக்கும்போது. யதேச்சையாக கருவில் ஏற்படும் மாற்றங்களினாலோ அல்லது தாய் - தந்தை ஆகியோரின் உயிரணுக்களிலுள்ள கோளாறினாலோ ஏற்படுகிறது. (தாயோ தந்தையோ யாரோ ஒருவருடைய உயிரணுக்களில் கோளாறு இருந்தாலும் நேரிடலாம்)
எந்தப் பிரிவினருக்கு இந்த வியாதி உண்டாகிறது?

ஆண், பெண் என்று வேறுபாடு பாராட்டுவதில்லை இந்த நோய் எந்த நாட்டினருக்கும். இனத்தவருக்கும். நிறத்தவருக்கும், மதத்தவருக்கும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வரக்கூடிய சோஷலிஸ் வியாதி இது!
இத்தகைய குழந்தைகளை பூரணமாகக் குணப்படுத்த முடியுமா?
இவ்வாறு பிறந்த குழந்தைகளை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பது வருத்தமான உண்மை. ஆனால் அன்பான சூழ்நிலையாலும், விரைவான கவனிப்பாலும், சிறப்புக் கல்வி முறையாலும், முறையான மருத்துவ சிகிச்சையாலும், நம்பிக்கையான கருத்துக்களாலும் அந்தக் குழந்தைகளுக்குப் பலன் கிடைக்குமாறு செய்யலாம்.

வளர்ச்சி குன்றினாலும் - முறையான பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் - சமூகத்தில் நிறைவான வாழ்க்கை வாழ வழி வகுக்கலாம்.
ஒருமுறை இதுபோன்று குழந்தை பிறந்தால் - மீண்டும் அதேகுறை கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?

முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வயது அதிகமாக ஆக இத்தகைய குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. முப்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்கு முதல் குழந்தைக்கு இப்படிப்பட்ட குறைபாடு இருந்தால், அடுத்த குழந்தைக்கும் இப்படி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு கோளாறு இருக்குமானால் (பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்) மீண்டும் இதுபோன்று பிறக்க வாய்ப்புள்ளது.
இத்தகைய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க வழியுண்டா?

நிச்சயம் உண்டு. வயது முதிர்ந்த காலத்தில் கருவுறும் தாய்மார்களையும் ஏற்கெனவே இத்தகைய குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களையும், அவர்கள் கருவுற்ற 16 வாரத்திற்குள் கருப்பையிலிருந்து நீர் எடுத்து பரிசோதித்து குறைபாடு உள்ளதா என்றறிந்து எச்சரிக்க முடியும். அவசியம் ஏற்பட்டால் சட்டபடி கருக்கலைப்பு செய்யலாம்.

ஒரு குழந்தை பாதிக்கப்பட்ட்ருந்தால் - அக்குழந்தையைப் பரிசோரித்து அறிவதன் மூலம் அடுத்த குழந்தை பாதிக்கப்படும் வாய்ப்பின் சதவிகிதத்தை ஓரளவு குறைக்கலாம்.

இக்குழந்தைகள் உடல் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?
இக்குழந்தைகளின் தசைகள் அனைத்தும் பலம் குறைந்து இருப்பலாம் சாதாரண குழந்தைகளை விட சற்று தாமதமாக (நாலைந்து வயதில்) நடப்பார்கள். ஆனால் கண்டிப்பாக நடப்பார்கள்.
ஆரம்ப காலத்திலேயே முறையான தசைப் பயிற்சிகளை அளித்தால் வளர்ச்சியைத் துரிதமடையச் செய்யலாம்.
இக்குழந்தைகளின் பேச்சுத் திறன் எவ்வாறு இருக்கும்?
இக்குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நபருக்கு நபர் மாறுபட்டிருக்கும். பேச்சு வளர்ச்சி தாமதப்படவோ பாதிக்கப்படவோ வாய்ப்பு உண்டு. என்றாலும் பேச்சுப் பயிற்சி மூலம் தங்கள் முழுத்திறனையும் அவர்கள் பெற நாம் உதவ முடியும்.
இத்தகைய குழந்தைகள் பள்ளி செல்ல முடியுமா?
பள்ளிப் பருவம் அடைந்ததும் அவர்கள் அறிவுத்திறநை மருத்துவர். மனநல ஆய்வாளர் மூலம் கணிப்பர். கண்டுபிடிப்பைப் பொறுத்து அந்தக் குழந்தையை சாதாரண பள்ளிகளிலோ அல்லது அவர்களுக்கு என்று ஏற்படுத்தப்பட்டு தனிப் பள்ளிகளிலோ பயிற்றுவிக்கலாம்.

இவர்களுடைய குணநலன்கள் எவ்வாறு இருக்கும்?
இக்குழந்தைகள் அமைதியானவர்களாகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்களாகவும், இசையில் நாட்டமுடையவர்களாகவும் விளையாட்டில் ஆர்வமுடையவர்களாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் முரட்டு சுபாவமுடையவர்களாகவும் இருப்பார்கள்.

இக்குழந்தைகளுக்குத் தனியான உணவுமுறைகள் உண்டா?
இல்லை. மற்ற குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல் தாய்ப்பாலும், முறையான நேரத்தில் இணை உணவும் சத்தான உணவும் கொடுக்கலாம். ஆனால், இக்குழந்தைகளின் தசைகள் பலம் குறைந்திருக்குமாதலால் கவனமாக சிறிது சிறிதாக உட்காரவைத்து உணவு ஊட்ட வேண்டும். இல்லையேல் புரையேறி பின்விளைவுகள் உண்டாகலாம்.
நோய்த் தடுப்பு ஊசி, மருந்துகள் மற்ற குழந்தைகளுக்குக் கொடுப்பதுபோல் அவசியம் கொடுக்க வேண்டும்.

இந்தக் குழந்தைகள் பெரியவர்களானால் திருமணம் செய்து கொள்ளலாமா?
இத்தகைய குழந்தைகளுக்குச் சாதாரணமாகவே மூளை வளர்ச்சியும், பாலுணர்வும் மிகவும் குறைந்திருக்கும். இவர்கள் திருமண வயதை அடைந்தாலும், ஆண் பாதிக்கப்பட்டவராயிருப்பின். குழந்தை பெறும் தன்மையற்றவராகவும், பெண் பாதிக்கப்பட்டிருந்தால் 50% தன்னைப் போன்று குறையுடைய குழந்தைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home