Sunday, 3 March 2013

சிறுமிகளை வாட்டும் அழகு மோகம்!- To fashion craze

To fashion craze ... - Child Care Tips and Informations in Tamil
கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஆட்டிப்படைத்து வரும் அழகு மோகம் தற்போது சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை!
நம்நாட்டில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள சிறுமிகள் 8 வயது முதலே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பெரும்பாலான சிறுமிகள் 3-வது வகுப்பு படிக்கும்போதே தனக்கென்று "மேக்-அப்" செட் வாங்கிக்கொள்கிறார்கள். விடுமுறை நாட்களில் தனக்கு வித விதமாக மேக்-அப் போட்டுக் கொண்டு உலா வருகிறார்கள்.
அதை போல் மிடி, ஜீன்ஸ், சுடிதார், கவுன், பேஷன் ஆடைகள் உடுத்திக்கொண்டு வெளியில் செல்கிறார்கள்.

இள வயதிலேயே சிறுமிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த அழகு மோகத்திற்கு காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரிய வந்தன.
7 வயதிலேயே அவர்கள் தங்களை 20 வயது பெண் போல நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு அவர்களது வயதை மீறிய அறிவு வளர்ச்சிதான் காரணம்.

இது தவிர டி.வி.களில் அடிக்கடி காட்டப்படும் அழகுக்கலை நிகழ்ச்சிகள் கூட சிறுமிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
சில பெற்றோரே தங்கள் மகளுக்கு 4, 5 வயதிலேயே "மேக்-அப்" செட் வாங்கிக் கொடுப்பதும் கூட அவர்களது அழகு மோகத்திற்கு தீனியாக அமைந்து விடுகிறது.

சில தனியார் பள்ளிகளில் அழகிப் போட்டி நடத்துகிறார்கள். இதைப்பார்க்கும் சிறுமிகள் தாங்களும் அதில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையில் "மேக்-அப்" பற்றி கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.
இந்த "திடீர்" அழகு மோகத்தால் சில சிறுமிகள் படிப்பில் கவனம் சிதறி... தோல்வியைக் கூட தழுவி வருகிறார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறது அந்த ஆய்வு!

இனியாவது சிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள் மேக்-அப்பில் ஆர்வம் காட்டினால், அதை கட்டுப்படுத்துவது நல்லது.
சிறுமிகளின் அழகு மோகம் அவர்களது எதிர்காலத்திற்குதான் வேட்டு வைக்கும்!

புரிந்தால் நல்லது!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home