Sunday, 3 March 2013

நாமே ரோல்மாடல் - We are Rolemodel to our child

We are Rolemodel to our child - Child Care Tips and Informations in Tamil
சின்ன விஷயமோ... பெரிய விஷயமோ.... குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கும் விஷயங்களின்படிதான் நாமும் நடக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் மனநிறைவான பதில் கிடைப்பதில்லை. "பள்ளிக்கூடத்துல சண்டை போடாதே" என்று பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் எத்தனையோ பேர், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சண்டை போடுகிறார்கள். "உன் கூடப் பிறந்தவதானே.. கேட்டா தரக் கூடாதா.. அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ" என்று சொல்பவர்கள், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உரிமை கேட்டு உடன் பிறந்தவர்களிடம் போராடுகிறார்கள். "அப்பாவையும் அம்மாவையும் எதிர்த்துப் பேசக்கூடாது..." என்று அறிவுரை சொல்லும் பொற்றோர்கள் தங்களுடைய தாய் - தந்தைக்கு நிகரான மாமனார், மாமியாரை உதாசினப்படுத்துகிறார்களே.

குழந்தைகளுக்கு நாமே ரோல்மாடல்களாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதில் கவனம் செலுத்தவில்லையென்றால் சுயநலம் மிகுந்த, பெற்றவர்களைத் துளியும் மதிக்காத ஒரு தலைமுறையை, நம்மையும் அறியாமல் நாமே உருவாக்கி விடுவோம்.

"குழந்தைகள் உங்கள் சொல்பேச்சு கேட்பதில்லை என்று வருத்தப்படாதீர்கள். பல சமயங்களில் அவர்கள் உங்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக வருத்தப்படுங்கள்" என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. அவசரமாகவும், அவசியமாகவும் யோசிக்க வேண்டிய பழமொழி!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home