தண்டால் ஜூஸ்

என்ன, பெயரே வித்தியாசமாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? இந்த ட்ரிங்க்ஸ் குஜராத்துல ரொம்ப ஃபேமஸ்.
தேவையான பொருட்கள்
பாதாம் _ 100 கிராம்,
பிஸ்தா_100 கிராம்,
முந்திரி_50 கிராம்,
உலர்ந்த திராட்சை_50 கிராம்,
பேரீச்சம்பழம்_50 கிராம்,
அத்திப்பழம் _50 கிராம்,
இதோடு மூன்று விதமான பழங்கள். உதாரணம்: ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம்,
மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ்_2 டீஸ்பூன்.
செய்முறை
பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உலர்ந்த அயிட்டங்களை அப்படியே அரைக்க முடியாது.
எனவே காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம் இதோடு சர்க்கரையையும் தண்ணீரையும் கலந்து கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ் கலந்தால் திக்கான லிக்வுட் கிடைக்கும். மில்க் மெய்டு மாதிரி இருக்கும்.
இதை ஒல்லியாக இருக்கிற பெண்கள் பாலில் கலந்து இரவில் குடிக்கலாம். எனர்ஜிக்கு மட்டும் குடிக்கிறவர்கள் காலையில் அப்படியே குடிக்கலாம்.
திருமணம் நடக்கப் போகும் பெண்ணுக்கு குஜராத்தில் கொடுக்கப்படுவது வழக்கம்.
அயர்ன் விட்டமின் நிறைந்தது. அதே நேரத்துல அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஓவர் குண்டாகவும் வாய்ப்பு இருக்கிறது.
டயட்
டீன் ஏஜ் பெண்கள் விரும்பிச் சாப்பிட வேண்டிய ஜூஸ்.
இதைச் சாப்பிட்டா இளமைக்குத் திரும்பிடலாம். அதுவும் இரத்த சோகை ஓடியே போய்டும்.
விட்டமின்_ ஈ சத்து நெறைய இருக்கு.
இந்த ஜூஸை பல நாட்கள் பாதுகாப்பாக வைக்க முடியாது. அன்றைக்கே செய்து அப்படியே குடித்தால்தான் ஓகே.
Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home