ஜல் ஜூராபாணி ஜூஸ்

பானிப்பூரி கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன ஜல்ஜீராபாணி? என்கிறீர்களா? இது ஜீரணசக்தியைக் கொடுக்கும் ஜகஜ்ஜால ஜல் ஜீராபாணி.
தேவையான பொருட்கள்
சீரகம் _ 30 கிராம்,
வெல்லம் _50 கிராம்,
ஏலக்காய் _2,
பட்டை_ 2,
வால் மிளகு _2,
தண்ணீர் _50 மி.லி.
எலுமிச்சம் பழம் _ கால் பழம்.
செய்முறை
முதலில் சீரகம், வெல்லம், ஏலக்காய், பட்டை, வால் மிளகு அனைத்திலும் தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் அரைத்து பவுடராக வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு 50 மி.லி. தண்ணீரையும் எலுமிச்சம்பழச் சாற்றையும் சூடு செய்து ஆறிய பிறகு அப்படியே மிக்ஸியில் அரைத்து வைக்கப்பட்ட பவுடரைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எப்போதும் குடிக்கலாம். அதே நேரத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்போது கால் கிளாஸ் ஜூஸுடன் தண்ணீரைக் கலந்து சாப்பிடலாம்.
டயட் சாப்பாடு சாப்ட்டதுக்கப்புறம் சாப்பிட வேண்டிய ஜூஸ். விட்டமின்&சி அடங்கியிருக்கு.
இதனால நல்லா ஜீரணம் ஆகிறது மட்டுமில்லாம உங்க முகத்துல இளமையும் அழகான களையும் மிளிரும்.
Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home