பைனாப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்
பைனாப்பிள் _ 1,
சர்க்கரை _ தேவைக்கு,
பைனாப்பிள் எசன்ஸ் _ 1 டீஸ்பூன்,
சிட்ரிக் ஆஸிட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம்.
செய்முறை
பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) மேல் தோலை எடுக்க வேண்டாம்.
அப்படியே நான்கு துண்டாக கட் பண்ணிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை கேரட் துருவுவது போல் துருவி விட்டு ஒரு மெல்லிய துணியில் பிழிந்து ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜூஸானது 200 கிராம் அளவு இருந்தால், அதே அளவு (200 கிராம்) தண்ணீரில் கலந்து அதோடு இரண்டு மடங்கு (400 கிராம்) சர்க்கரையும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
ஆறிய பிறகு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட வேண்டும்.
இதை அப்படியே குடிக்கக் கூடாது.
கால் பங்கு ஜூஸுடன் முக்கால் பங்கு தண்ணீர் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது.
வெயில் காலத்தில் ஏற்படும் ஸ்கின் அலர்ஜிகளைத் தவிர்க்கலாம். டயட் விட்டமின்_ஏ சத்து அடங்கியது. மினரல், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் சத்துகள் அடங்கியது.
சிட்ரிக் அமிலத்துக்கு பதில் எலுமிச்சம் பழம்தான் பெஸ்ட்&சி விட்டமின்) டயாபட்டீஸ் அன்பர்கள் உஷார்!
Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home