Monday, 28 January 2013

மிக்ஸடு வெஜிடபிள் ஜூஸ்

 
தேவையான பொருட்கள்

கேரட் _100 கிராம்,
பீட்ரூட்_ 50 கிராம்,
கோஸ் _50 கிராம்,
தண்ணீர்_ 2 டம்ளர்,
இஞ்சி_ 1, புதினா _ கைப்பிடி அளவு.


செய்முறை

கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும்,

பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக் (சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு சீக்கிரம் மூன்றையும் ஒன்றாகவே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும்.

ஒரு கட்டி வெல்லத்தை அப்படியே போட வேண்டும். குடிச்சுப் பாருங்க மிக்ஸ்டு வெஜிடபுள் ஜூஸ்.

ஆரோக்கியம் தானா வரும்.

தேவையான பொருட்கள் கேரட்_ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.

ரெசிபிகள் பற்றிய சில ஆலோசனைகளும், குறிப்புகளும்.

ஒரு க்ளாஸ் அளவு என்பது 200 மி.லி. அளவு.

இருபது நாட்கள் வரை தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஜூஸை சரியான கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணாடி பாட்டிலை நன்றாகக் கழுவி வெளியில் மேல்நோக்கியும், கீழே கவுத்தும் காய வைத்த பிறகே ஜூஸை பதப்படுத்த வேண்டும்.

ப்ளாஸ்டிக் பாத்திரம் தவிர்க்கவும்.
1 டீஸ்பூன் என்பது _5 கிராம்
1 மேஜைகரண்டி _ 15 கிராம்
பதப்படுத்தி வைக்கப்படும் ஜூஸ்கள்
கால் டம்ளரில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றிப் பருகலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home