Monday, 11 February 2013

உருளைக்கிழங்கு சாலட்

Potato Salat - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு - 2 கப்
கேரட் - 2
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
புதினா - 1 கப்

செய்முறை:-

உருளைக்கிழங்கையும், கேரட்டையும் முதலில் நன்கு வேகவைத்து அதை மசித்துக்கொள்ளவும்.

அந்த கலவையையும் தயிரையும் சேர்த்த பின், மிளகுத்தூளை அதனுடன் கலக்கவும், அவற்றின் மீது புதினா இலைகளை வைத்து சாப்பிடலாம்.

Labels:

வாழைப்பழ சாக்லேட்

Banana Chocolate - Cooking Recipes in Tamil
தேவையானவை 

கனிந்த வாழைப்பழம் - 10
பால் பவுடர் - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - அரை கப்
நைஸாக சீவிய முந்திரி
பிஸ்தா - 4 டீஸ்பூன்

செய்முறை:-

கொக்கோ பவுடர், பால் பவுடர் இரண்டையும் சலித்து வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

முந்திரி, பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
அடி கனமான, வாயகன்ற ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, வாழைப்பழக்கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

 சுருண்டு வந்ததும், பால் பவுடரைத் தூவி, வெண்ணெயைப் போட்டுக் கிளறவும், தீயைக் குறைத்து, கலவை கையில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறவும்.

பிறகு, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாக்கி, முந்திரி, பிஸ்தா துண்டுகளை மேலே தூவவும்.

ஆறிய பின் வில்லைகள் போடவும்.
 
ஒரு வாரம் வரை இந்த சாக்லேட்டை வைத்திருக்கலாம். வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடிக்கும்.

Labels: ,

Sunday, 10 February 2013

சிக்கன் சாலட்

Chicken Salad - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்

சிக்கன் - 2 துண்டு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
புதினா - 2 ஸ்பூன்
பிரெட் தூள்கள் - 1 ஸ்பூன் (வறுத்தது)
கோஸ் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்யும் முறை: 

முதலில் சிக்கன் மற்றும் கோஸை தனித்தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஏற்கனவே வேக வைத்த சிக்கன் துண்டுகளுடன் வேக வைத்த கோஸையும் சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்வும்.

கலவையின் மீது பிரட் தூள் மற்றும் புதினாவை தூவி பரிமாறலாம். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர்.

Labels:

Tuesday, 5 February 2013

மக்காச்சோளம் சாலட்

தக்காளி
தேவையான பொருள்கள்:
  1. மக்காச்சோளம் = 2 கப்
  2. தக்காளி = 1
  3. வெங்காயம் = 1
  4. மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
  5. எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  7. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மக்காச்சோளத்தை பாதி அளவு வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த சோளம் ஆகியவற்றை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த “மக்காச்சோளம் சாலட்” தயார்.

மருத்துவ குணங்கள்:
  • மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கோபால்ட், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின், மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது.
  • மேலும் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி”, வைட்டமின் “டி”, வைட்டமின் “கே” வைட்டமின் “பி6″, வைட்டமின் “பி12″ மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.
  • சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும்.
இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்

Labels:

Monday, 4 February 2013

ஃப்ரூட் சாலட்




இந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம். 


தேவையான பொருட்கள்:

தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி - 1 கப்

கிர்ணிப்பழம் - 1 கப்

முலாம் பழம் - 1 கப்

இனிப்பான நார் இல்லாத மாம்பழம் - 1 கப்

இளசாக உள்ள நுங்கு துண்டுகள் - 1 கப்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

தேவையானால் கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

பால் - 1 கப்

(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் - 1 கப், கொட்டையில்லாத திராட்சை - 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் - 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி - 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)

செய்முறை:

* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.

* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல்
கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது - 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.

* சுமார் - 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு - 2 மாம்பழம், - 1 கிர்ணிப்பழம், - 1 முலாம் பழம், - 4 தக்காளி, 100 - கிராம் திராட்சை, - 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.

Labels: