Wednesday, 6 February 2013

தலைவலி குறைய- அவுரி இலை , தேங்காய் எண்ணெய்

அவுரி இலை

அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. அவுரி இலை.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:

அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய- வெட்டிவேர் - தர்ப்பூசணி விதை

தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. தர்ப்பூசணி விதை.
  2. வெட்டிவேர்.
செய்முறை:

தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய- எலுமிச்சை பழச்சாறு +டீ

எலுமிச்சை பழச்சாறு
டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. டீ. அல்லது காப்பி.
  2. எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:

டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய- குங்குமப்பூ

குங்குமப்பூ
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. குங்குமப்பூ.
செய்முறை:

குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய - கிராம்பு

கிராம்பு

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. கிராம்பு.
செய்முறை:

கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்

Labels:

தலைவலி குறைய- கிராம்பு ,சீரகம்

கிராம்பு

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு.
  2. சீரகம்.
செய்முறை:

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய- மஞ்சள் , பூண்டு

மஞ்சள்

மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மஞ்சள்.
  2. பூண்டு.
செய்முறை:

மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய - குப்பை மேனி ,உத்தாமணி, கீழாநெல்லி

Labels:

தலைவலி குறைய - வெற்றிலை

வெற்றிலை

வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. வெற்றிலை.
  2. கிராம்பு.
செய்முறை:

வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய - தலைவலி தைலம்

நல்லெண்ணெய்
தேவையான பொருட்கள்:
  1. மிளகாய்- 200 கிராம்
  2. மிளகு – 100 கிராம்
  3. பால் – 1/2 லிட்டர்
  4. நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:
  • மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
  • வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
  • எவ்விதமான தலைவலியும் குறையும்.

Labels:

தலைவலி குறைய - செண்பக இலை

செண்பக இலை

செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:
  • சூட்டினால் ஏற்படும் தலைவலி.
  • உடல் சூடாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. செண்பக இலை.
  2. நெய்.
  3. ஓமம்.
செய்முறை:

செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

Labels:

தலைவலி குறைய - வேப்பம் பட்டை ,கடுக்காய்

வேப்பம் பட்டை

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. வேப்பம் பட்டை.
  2. கடுக்காய்
  3. கோரைக் கிழங்கு.
  4. நிலவேம்பு.
  5. தேன்.
செய்முறை:

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய - மகிழம்பூ ,சோம்பு

மகிழம்பூ

மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.
செய்முறை:

மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

Labels:

தலைவலி குறைய - கற்பூரவல்லி

கற்பூரவல்லி இலை

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கற்பூரவல்லி இலைச்சாறு.
  2. நல்லெண்ணெய்
  3. சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

Labels:

Tuesday, 29 January 2013

பேரிக்காய் சாப்பிடுங்க கரு குழந்தைக்கு நல்லது!

Health Benefits Pears
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். 
 
செயல்திறன் மிக்க சத்துக்கள்
 
 பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன.
 
 
நன்மை தரும் நார்ச்சத்து 
 
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செரிந்துள்ளது. 
 
எலும்பு வளர்ச்சிக்கு 
 
இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை ஏற்படும். கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.தாய்ப்பால் சுரக்கும் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

குழந்தைகள் வளர்ச்சிக்கு 
 
வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் ஒரு சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால் v வளர்ச்சி பெறுவார்கள்.

Labels:

Monday, 28 January 2013

கறிவேப்பிலையை இனி தூக்கி எறியாதீங்க!

Chemical Curry Leaves Can Cure Prostate Cancer
உணவில் கறிவேப்பிலையை பார்த்தலே ஏதோ ஆகாத பொருளைக் காண்பதுபோல தூக்கி எறிந்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். ஆனால் கறிவேப்பிலை புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
 
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட் ஆப் கெமிகல் பயாலஜி, மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். 
 
அவர்களின் ஆய்வில் பல்வேறு அதிசயத்தக்க உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது. இதன் காரணமாக புரஸ்ட்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதேபோல் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கறிவேப்பிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
 
கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறும் ஆய்வாளர்கள் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். 
 
 கடுகு, கறிவேப்பிலை தாளிப்பு
 
 உணவு சமைக்கும் போது இறுதியில் கறிவேப்பிலையையும், கடுகையும் சேர்த்து தாளிக்கின்றோம். அப்பொழுதுதான் சமையல் முழுமையடைகிறது. இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பது பற்றி திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக் கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். 
 
மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர். இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர். இத்தனை நன்மை கொண்ட கறிவேப்பிலையை இனி தூக்கி எறிய மாட்டீர்கள்தானே?

Labels:

ஆண்மைகுறைபாடு நீக்கும் தொட்டாற்சுருங்கி!

Medical Uses The Sensitive Plant  
 
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. 
 
தெய்வீக மூலிகை 
 
 ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர். 
 
மாந்திரீகத் தன்மை 
 
இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். 
 
சிறுநீர் கல் கரையும் 
 
தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். 
 
ஆண்மை பெருகும் 
 
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
 
 மூலநோய் நீங்கும் 
 
இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். 
 
 
இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.

Labels:

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். 
 
 ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து 
 
காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.


தாது விருத்தி தரும் பூசணிக்காய் 
 
 பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.


இனிமையான உறவுக்கு இலுப்பை பூ 
 
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
 
குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்
 
 சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

Labels:

டைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

Natural Remedies The Treatment Diabetes
வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். 
 
 
இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன். 
 
நாவல்பழக் கொட்டை 
 
நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 
 மாந்தளிர் பொடி 
 
 மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும். 
 
வேப்பம்பூ பொடி 
 
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும். 
 
இசங்கு வேர் 
 
இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும்.நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். 
 
வெந்தையக் கீரை  
 
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1 டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது. 
 
அவரைக்காய் பொரியல் 
 
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும். 
 
பாதம் பருப்பு 
 
 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Labels:

Saturday, 19 January 2013

மழைக்கால சளி, தலைவலி போக என்ன சாப்பிடனும் தெரியுமா?

 Home Remedies Monsoon Diseases
 
மழை என்பது சந்தோசமான விசயம்தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமால் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். என்ன பொருட்கள் சாப்பிட்டால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். 
 
விரவி மஞ்சள்
 
 மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும். அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.
 
 மஞ்சள்தூள் 
 
ஆவி பிடிங்க ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும். 
 
 துளசி இலை 
 
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 
 
பனங்கிழங்கு
 
 மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
 
 மழைக்கால கசாயம்
 
 மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.
 
மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை  
 
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.
 
 தலைப்பாரம் நீங்க 
 
 இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 
 
 சாம்பிராணி புகை போடுங்க 
 
ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும். 
 
தும்மல் தீர்க்கும் தூதுவளை 
 
 தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும் சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

Labels: